மகளை அவதூறு பேசியதால் தாய் விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-12-11 18:05 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் பொன்மனை  பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50)  மகள்  ஜெனிபர் (27).  குடும்ப பிரச்சனை காரணமாக ஜெனிபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.   கன்னியாகுமரியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்த ஜெனிபருக்கும் அதே பகுதி சேர்ந்த திருமணமான   சுரேஷ்குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.  இதை சுரேஷ்குமார் மனைவி தவறாக புரிந்து கொண்டு கண்டித்திருக்கிறார்.  இது சம்பந்தமாக கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் சுரேஷ்குமார் மனைவி  புகார் அளித்ததால்,  இருவரும் பழக்கத்தை  குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில்  சம்பவ தினம் சுரேஷ்குமார் தனது வீட்டுக்கு செல்லாததால் அவரது  மனைவி மற்றும் உறவினாக்கள்  ஜெனிபர் வீட்டுக்கு தேடி வந்துள்ளனர். அப்போது ஜெனிபரின் தாயார் குளோரியிடம் தகராறு செய்து, ஜெனிபரையும் குடும்பத்தினரையும்  அவதூறாக பேசியுள்ளனர்.  இதில் மனம் உடைந்த குளோரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை  குடித்தார்.  அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி குளோரி நேற்று இறந்தார்.  இந்த சம்பவம் குறித்து குளோரியின் கணவர் செந்தில்குமார் குலசேகரம் போலிசில்  புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News