சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா

தேர்த்திருவிழாவில் ஒவ்வொருநாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ஏற்பாடு;

Update: 2024-02-16 18:36 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. அதில், ஆண்டுதோறும் மாசிமாதம் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும். மாசி மக தேர்த்திருவிழா (பிப்ரவரி - 16) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

வருகிற பிப்ரவரி-23 தேதி இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் சாமி புறப்பட்டு சோமேஸ்வரர் கோயில் தெப்பக் குளத்திற்கு சென்று, சோமேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு, வான வேடிக்கைகளை பார்த்துவிட்டு குதிரை வாகனத்தில் கோயில் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தாண்டு குதிரை வாகனம் தூக்கும் முறை பொட்டணம் ஊர் பொதுமக்களை சார்ந்ததாகும்.

பிப்ரவரி 24- ம்தேதி மாலை வரதராஜப் பெருமாள் பெரிய தேரோட்டமும் நடக்கிறது. அடுத்த நாள் பிப்ரவரி 25- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரிய தேர் நிலை சேரும். பிப்ரவரி 26 - ம் தேதி திங்கட்கிழமை காலை சோமேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும்.விழா ஏற்பாடுகளை தக்கார் ரா.இளையராஜா, செயல் அலுவலர் ரா.சாந்தி, திருக்கோயில் கட்டளைதாரர்கள் , அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News