நீங்கள் நலமா ? திட்டம் - அமைச்சர் விளக்கம்

பொதுமக்கள் அரசிடம் கொடுத்த கோரிக்கைகள் நிறைவேறி உள்ளனவா என்பதை தெரிந்து கொள்ளவே "நீங்கள் நலமா" என்ற பொதுமக்களிடம் தொலைபேசியில் உரையாடும் திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார் . என விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தெரிவித்தார்.;

Update: 2024-03-07 03:48 GMT

தமிழகத்தில் தமிழக அரசால் நீங்கள் நலமா என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில்  நடைபெற்ற நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவுக்கு பின்னர் நீங்கள் நலமா என்னும் திட்டத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டத்தில்  தொடங்கி வைத்தார். மேலும் நீங்கள் நலமா திட்டத்தின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் பயனாளிகளை குறித்த நேரத்தில் சென்றடைகிறதா என்பது குறித்து நேரடியாக பயனாளிகளிடம் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பயனாளிகளின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த நீங்கள் நலமா திட்டத்தின்படி பயனாளிகளிடம் தொலைபேசியில் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளதா எனக் கேட்டு வருவதாகவும் ,ஒரு வேளை இல்லையென்றால் உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.இதன் மூலம் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பது முதல்வரின் எண்ணமாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News