விழுப்புரத்தில் உதயநிதி பிரச்சாரத்திற்கு வந்த போது விபத்தில் ஒருவர் பலி

விழுப்புரத்தில் உதயநிதி பிரச்சாரத்திற்கு வந்த போது விபத்தில் ஒருவர் பலியானர்.

Update: 2024-03-30 16:39 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார், இதில் கூட்டத்தைச் சேர்பதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் டாடா ஏஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்,

சின்னத்தச்சூர் கிராமத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்த டாடா ஏஸ் வாகனம் தென்பேர் என்ற இடத்தில் வந்த போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது, விபத்தில் சின்னத்தச்சூரைச் சேர்ந்த 60 வயது முதியவர் அருள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,

படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

Tags:    

Similar News