குப்பைகளை தேக்கி வைத்த குடியிருப்பு உரிமையாளருக்கு அபராதம்

மயிலாடுதுறையில் குப்பைகளை தேக்கி வைத்த குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-12-14 11:02 GMT

தேங்கியுள்ள குப்பைகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை நகர் 17 வது வார்டில் உள்ள, மகாதான தெருவில் ஹிமானா காம்ப்ளக்ஸ் குடியிருப்பு பகுதியில் , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, முறையாக, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காமல், சுகாதாரமற்ற முறையில், தொடர்ந்து குப்பைகள் தேங்கி இருக்கும் வகையில், வளாகத்தின் வாயிலிலேயே வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தூய்மை பணியாளர்களுக்கு, முறையாக குப்பைகளை பிரித்து தர வேண்டுமென அறிவுறுத்தினார். குடியிருப்புவாசிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர் அப்பகுதியில் இருந்த குப்பைகள் தூய்மை ,பணியாளர்களைக் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டது.

Tags:    

Similar News