சிங்கப்பூரில் கை உடைந்ததால் வாலிபர் விபத்து இழப்பீடு வழங்க மனு

சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் கை உடைந்து நொறுங்கிய வாலிபர் விபத்து இழப்பீடு வழங்க எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Update: 2024-06-27 14:34 GMT

மனு அளிக்க வந்த வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்ட பகுதியைச் சேர்ந்த மணி மகன் ராஜுவ் (28) இவர் நாட்றம்பள்ளியில் உள்ள மோகன் ஏர் டிராவல்ஸ் மூலம் மோகன் என்பவரிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஸ்ரீ ஆஸ்ட்ரோ டிரைனிங் சென்டர் கொளத்தூர் சென்னையில் உள்ள நிறுவனத்தினர் மூலமாக சிங்கப்பூரில் உள்ள எஸ்என்.எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த ஒன்றாம் மாதம் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் கொடுக்காமல் கேபிள் ரோல் டரம்மை தன்னுடன் வேலை செய்யும் நபர்கள் படிக்கட்டின் வழியாக எடுத்துச் சென்றனர். அப்போது அவர்கள் கை தவறிவிட்டதன் காரணமாக எனது கையின் மீது விழுந்து கை நொறுங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த நிறுவனத்தின் முதலாளி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார. மேலும் இந்த தகவல் குறித்து நாட்றம்பள்ளியில் உள்ள மோகன் ஏர் டிராவல்ஸ் தகவல் தெரிவித்ததன் காரணமாக இந்தியா வந்து விடுங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் அதற்கு உண்டான பணத்தை இந்தியாவில் கொடுப்பதாக சிங்கப்பூரிலிருந்து ராஜுவை இந்தியாவிற்கு வரவழைத்துள்ளனர்.

ஆனால் ராஜீவின் கையை சரி செய்ய 5 லட்சத்திற்கும் மேலாக செலவாகியும் மேலும் இடது கை இயங்காமலும் உள்ளது இதன் காரணமாக விபத்துக்கு உண்டான இழப்பீடை வழங்குவதாக கூறிய மூன்று நிறுவனத்தினரும் இதுவரை வழங்கவில்லை

எனவே அவர்களிடம் இருந்து விபத்து இழப்பீடை பெற்றுத் தர வேண்டும் என ராஜுவ் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனுவை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News