குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி மனு.

அரசு அனுமதித்த தொகை பெற்று குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி மனு.

Update: 2023-12-12 03:45 GMT

அரசு அனுமதித்த தொகை பெற்று குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி மனு.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசு அனுமதித்த தொகை பெற்று குடிநீர் இணைப்பு வழங்கவும், முறையான குடிநீர் வழங்க கேட்டும் எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர், சமத்துவபுரம் மற்றும் அண்ணாமலை நகர், காந்தி நகர், பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பெரம்பலூர் அடுத்துள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர், சமத்துவபுரம் மற்றும் அண்ணாமலை நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில் தாங்கள் வசிக்கும் பெரம்பலூர் ஊராட்சியில்,ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்த திட்டம் முடிவடைவதற்குள், ஏற்கனவே இருந்த பொதுக் குடிநீர் இணைப்பினை அகற்றி விட்டனர் இதனால் குடிநீர் கிடைப்பதில் பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் இணைப்பு வழங்க அரசு நிர்ணயத்தை தொகை ஆதிதிராவிடர் வகுப்பினர்க்கு 1600 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 2500 ரூபாய் அறிவித்துள்ள நிலையில், தற்போது எளம்பலூர் ஊராட்சியில் 5600 கட்ட வேண்டும் என்றும் மேலும் குழாய் அமைத்து தருபவர்களுக்கு ரூபாய் 1500 கூடுதல் தொகை கட்ட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் தங்களால் தொகை கட்ட முடியாததால் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எழுத்து மூலம் செலுத்த கூறும் தொகையை தாங்கள் செலுத்த தயாராக உள்ளதாகவும், எனவே தங்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு அரசு நிர்ணயத்தை தொகை பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும் எனவும், மேலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துச் சென்றனர்.
Tags:    

Similar News