மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் பேட்டி

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்;

Update: 2023-12-21 08:47 GMT

மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் பேட்டி

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் பேட்டியளித்தார். சென்னையை அடுத்து நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பேரழிவை சந்திருக்கிறது. விவசாயம் அடியோடு அழிந்து இருக்கிறது வீடுகளை இழந்து இருக்கிறார்கள். பல நூறு கிராமங்கள் தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு தீவுகளாக காட்சியளிக்கின்றது. நெல்லை ,தூத்துக்குடி பேரழிவை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய ,மாநில அரசுகள் இணைந்து நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .உயிரிழந்த குடும்பங்களுக்கு தல ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News