கர்ப்பிணி பெண் தற்கொலை
மயிலாடுதுறை அருகே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையை அடுத்துள்ள மூங்கில்தோட்டத்தில் வசித்துவந்த தனபாலம் மனைவி கலைச்செல்வி(27). இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த கணேசன் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இதற்கிடையே கணேசன் மாரடைப்பால் இறந்துவிட்டார். மூங்கில் தோட்டத்தில் தன் தாய்வீட்டில் வசித்துவந்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மூங்கில் தோட்டத்தில் உள்ள தனபாலனை திருமணம் செய்துகொண்டார். கலைச் செல்வி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இதனால் கலைச்செல்வி மன உளைச்சலில் இருந்துள்ளார், சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி திடீரென்று வீட்டிற்குள் சென்று தூக்குப் போட்டு இறந்துவிட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.