ஓய்வுபெற்ற தொழிலாளியை பணிக்கு அமர்த்த எதிர்ப்பு - ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-11 18:26 GMT
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தஞ்சை புறநகர் கிளை பணிமனையில், நிரந்த தொழிலாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை, அத்துக் கூலியாக பணியில் உள்ள ஓய்வு பெற்ற பணியாளருக்கு வழங்கிய வணிக மேலாளரைக் கண்டித்து, புறநகர் பணிமனை சிஐடியு கிளைச் செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் சனிக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் காரல்மார்ஸ், மண்டல பொருளாளர் ராமசாமி, விரைவுப் போக்குவரத்துக் கழக மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன் , ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் என்.குருசாமி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, சா.செங்குட்டுவன், தரைக்கடை சங்க தலைவர் மணிமாறன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஜீவா, பணிமனை பொருளாளர் ராஜசேகரன், விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை பொருளாளர் ஆர்.முருகேசன், விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை துணை தலைவர் டி.பரத்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீதிமன்ற உத்தரவை மீறி, அத்துமீறி செயல்படும் வணிக மேலாளர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.