மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Update: 2023-10-31 14:54 GMT

மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ஆட்சியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்  இன்று (31.10.2023) நடைபெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைைபெற்றது. 

மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2307 மாற்றுத்திறன்  குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை முறையான மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாளஅட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை  கண்டறிதல் மற்றும் மத்திய – மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிட்சை தேவைப்படும் பயனாளிகளைகண்டறிந்து, அறுவை சிகிட்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

இம்மருத்துவ  முகாமானது சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து அனைத்து வட்டார வள மையங்களிலும் நடைபெறுகிறது.  இவ்வாறு பேசினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் இரா.முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்  சிவசங்கரன்,  மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.மோகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News