பேராவூரணி அருகே காட்டாற்றில் மணல் திருட்டு 

பேராவூரணி பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Update: 2024-03-05 14:04 GMT
மணல் திருட்டு நடந்துள்ள இடம்

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே மேலப் பூவாணம் அக்னியாற்றில் அனுமதியின்றி மணல் திருட்டு நடப்பதை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அக்னியாறு எனப்படும் காட்டாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி, பட்டுக்கோட்டை தாலுகா பூவாணம் கிராமம் வழியாக ராஜாமடம் அருகே கடலிில் சென்று கலக்கிறது. பூவாணம் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அக்னியாற்றில் பல வருடங்களாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.  அரசு மற்றும் காவல்துறை அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கும் இப்பகுதி பொதுமக்கள், தற்போது மணல் கடத்தல் நபர்கள்,

பகல் நேரங்களில் இந்த காட்டாற்றில் மண்டி கிடக்கும் கோரைப்புற்களை தீ வைத்து எரித்து விட்டு, மணல் திட்டுகள் அமைத்து, மணல் அள்ள ஏற்றவாறு இடத்தை சரி செய்து கொண்டு, இரவு நேரங்களில் லாரி, டெம்போ மூலம் மணல் அள்ளி வருகின்றனர். 

இது குறித்து கிராம மக்கள் அரசு அலுவலர்களிடம் மணல் திருட்டு சம்பந்தமாக தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அக்னியாற்றில்  மணல் திருட்டை தடுக்க வேண்டும்" என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News