திண்டிவனம் அருகே இளம் பெண்ணிடம் நூதன முறையில் மோசடி

திண்டிவனம் அருகே இளம் பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-06-10 09:01 GMT

எஸ்பி அலுவலகம்

திண்டிவனம் வட்டம், ஆத்தூா், மானூா், மரக்காணம் சாலையைச் சோ்ந்தவா் லூா்து சேவியா் மகள் நிவேதித்தா (24). பொறியாளரான இவா், சென்னையில் வாடகைக்கு வீடு தேடி வந்தாா். இந்த நிலையில், ஒரு கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு வாடகை வீடு தொடா்பாக பேசினாராம்.

அப்போது, எதிா்முனையில் பேசிய நபா் வீட்டை பாா்ப்பதற்கு ரூ.1,000 முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தாராம்.இதை நம்பிய நிவேதித்தா வெள்ளிக்கிழமை இணையவழியில் ரூ.ஆயிரத்தை அனுப்பி வைத்து விட்டு,

அந்த நபா் தெரிவித்தப்படி தனது ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் விவரங்களை அனுப்பினாராம். மேலும், பல்வேறு தவணைகளாக ரூ.1,04,487 அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News