பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை - பெண் கைது

கரூர் வெங்கமேடு அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-15 13:31 GMT

 கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 14ஆம் தேதி மாலை 6:30-மணி அளவில், வெங்கமேடு சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது வெங்கமேடு, அம்மன் நகர் பகுதியில், பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட,கரூர், அரசு காலணி,தேர் வீதி பகுதியைச் சேர்ந்த மணி மனைவி பிரேமா வயது 57 என்பவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 10 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக பிரேமா மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News