நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்

தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அவரது அரசின் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி;

Update: 2024-01-13 10:52 GMT
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக செயலாளர் மற்றும் மண்டல நகரமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்சமூக ஊடகங்களில் திராவிட மாடல் கொள்கை, தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அவரது அரசின் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்து காணொளி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் #WingsOfDMK என்ற ஹேஷ் டேக்கில் இணைத்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது .உடனடியாக இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் தங்களை இணைத்துக் கொண்டனர்
Tags:    

Similar News