தருமபுரி மாவட்டத்தில் மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை: நாளை கடைசி நாள்
தருமபுரி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் ,விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 250 கோழிகள் கொண்ட சிறிய அளவிலான நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக 3 முதல் 6 அலகுகள் குறியீடாக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனா ளிகளாக தேர்ந்தெடுக்கபடுப வர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு,
உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்க ளுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் ரூ.1லட்சத்து 56ஆயிரத்து 875 மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பு தொகையை வங்கிமூல மாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமா கவோ பயனாளி திரட்ட வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும்,
கோழி கொட்டகை கட்ட மனிதகுடி யிருப்புகளில் இருந்து விலகி இருக்கும் வகையில் குறைந்த பட்சம் 625சதுரடி நிலம் வைத் திருப்பவராகவும் இருக்க வேண்டும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் ,கோழி குஞ்சுகள் கால் நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள விவசாயி தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவி ருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற் கான ஆதார ஆவணங்கள், 3 ஆண்டுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதி மொழி 2022-2023 மற்றும் 2023-2024-ம் ஆண்டுகளுக் கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைய வில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அருகே உள்ள கால்நடை மருந்தகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை)க்குள் சமர்ப்பிக்கு மாறு கேட்டு கொள்ளப்படு கிறது.
இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு கால் நடைபராமரிப்புத்துறை தர்ம புரி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் தர்மபுரி, அரூரில் செயல்படும் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன் பெற இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.