பூம்புகார் அருகே மீன் இறங்குதளத்தை திறந்து வைத்த முதல்வர்

பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் 8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் மீன் ஏல கூடம் ஆகியவற்றை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

Update: 2024-01-04 14:50 GMT
மீன் ஏல கூடத்தை திறந்து வைத்த முதல்வர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட வானகிரி மீனவர் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேர்ந்த மீனவர்கள் அருகே உள்ள கிராமத்திலிருந்து மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் தங்களது பகுதியிலேயே மீன் இறங்குதளம் மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட வசதிகள் வேண்டிய கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து கடந்த ஆண்டு ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் வானகிரி மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் மற்றும் ஏலக்கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் மீன்பிடி இறங்குதளம் மற்றும் ஏலக் கூடத்தை திறந்து வைத்தார்.

வானகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா .எம்.முருகன் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News