இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது முதியவர் ஓட்டிய டூ வீலர் மோதி விபத்து
இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது முதியவர் ஓட்டிய டூ வீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
Update: 2024-04-10 16:43 GMT
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாளையம் அருகே உள்ள பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வைரன் மகன் சின்னசாமி வயது 28. இவர் ஏப்ரல் 8-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் தோகை மலையில் இருந்து பாளையம் செல்லும் சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மயிலம்பட்டி அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வீர கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரமலை வயது 60 என்பவர் ஓட்டி வந்த டூவீலர், சின்னச்சாமி ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சின்னச்சாமிக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சின்னசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் டூவீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முதியவர் வீரமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.