திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் பள்ளி வேட்டை

Update: 2023-10-23 09:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித்திருவிழா கடந்த14 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடந்து விழா நாட்களில் சுவாமி பல்லக்கு, நாற்காலி அனந்த வாகனத்தில் எழுந்தருளல், ஸ்ரீபூதபலி எழுந்தருளல்,கதகளி ஆகியன நடந்தது. ஒன்பதாம் திருவிழா நாளான நேற்று இரவு சுவாமி தளியல் சிவன் கோயிலுக்கு வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

ஆதிகேச்வப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணனும் அலங்கரிக்கப்பட்ட்ட கருட வாகனத்தில் அமைதியாக கோயிலில் இருந்து புறப்பட்டு தளியல் கோவிலுக்கு சென்றனர். அங்கு வேட்டை நிகழ்ச்சிக்குப்பின்னர் கோயிலுக்கு எழுந்தருளிய ஆதிகேசவப்பெருமாளுக்கு பக்தர்கள் வழி நெடுக வரவேற்பு அளித்தனர். பத்தாம் திருவிழா நாளான இன்று (23.ந்தேதி) காலை பெருமாள் வேட்டைக்குச்சென்ற நிகழ்வை புனிதப்படுத்தும் திருவிலக்கம் நட்க்கிறது. .

தொடர்ந்து உற்சவபலி நடக்கிறது. மாலையில் ஆதிகேசவப்பெருமாள் பாலாலய சன்னதி, ஸ்ரீகிருஷ்ணன் சன்னதி, ஐயப்ப சாமி சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. . இரவு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் தளியல் ஆற்றில் ஆறாட்டுக்காக ஆதிகேசவப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணசாமியும் எழுந்தருளுகின்றனர். . பின்னர் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி முன்செல்ல கோயிலில் இருந்து தளியல் நோக்கி சுவாமி பவனி நடக்கிறது. துப்பாக்கிய் ஏந்திய போலீசார் மரியாதை செலுத்துகின்றனர்.

Tags:    

Similar News