குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 12:23 GMT
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ இன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை தினத்தைக் கொண்டாடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல்மழை இல்லாததால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. ஐந்தருவியில் நான்கு கிளைகளில் குறைந்த அளவிலும், பேரருவியிலும்,
தண்ணீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று குளித்து மகிழ்ந்தனா். இன்று காலைமுதல் வெயில் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. குளிா்ந்த காற்று வீசியது என்பதும் குறிப்பிடத்தக்கது.