ஐயப்ப சாமியை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகி மீது நடவடிக்கை எடுக்க ஆரணியில் புகார்.
ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் இந்துமுன்னணியினர் புகார் கொடுத்தனர்.
ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் இந்துமுன்னணியினர் புகார் கொடுத்தனர். இந்து மற்றும் ஐயப்ப பக்தர்கள் வணங்கி வரும் ஐயப்ப சுவாமியை இழிவு படுத்தி பாடகி இசைவாணி பாடியதால் பக்தர்கள் மனம் புண்படுத்தும் விதமாகவும், மத மோதலை உண்டாக்கும் நோக்கத்துடனும் உள்ளதால் பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் புகார் கொடுத்தனர். உடன் இளைஞரணி மாவட்ட செயலாளர் மோ.விக்னேஷ், நகர செயலாளர் கபாலி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.