தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி பகுதியில் சரிவர சாலைகள் அமைக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-06 06:50 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 179 A இல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சாலை போடப்பட்டது தோரண பகுதியில் சாலை சரிவர போடாததால் சமீபத்தில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த கன மழையில் சாலையில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் தெரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் விரைந்து வந்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்து சாலையை சரி செய்வதாக கூறியத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News