சிறுதானிய உணவுகளை பயன்படுத்துங்கள் - ஆட்சியர் வேண்டுகோள்

Update: 2023-12-14 08:22 GMT

மாவட்ட ஆட்சியர் கற்பகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சர்வதேச சிறுதானிய ஆண்டினையொட்டி சிறுதானிய மகத்துவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தெரிவித்ததாவது,

பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலபடுத்தும் வகையில் 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைபிடிக்கப்படுகிறது.    சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானியங்களைக் குறிக்கும். இவை மிக குறுகிய காலத்தில் சாதாரண மண்ணில், வறட்சிக் காலத்திலும் வளர கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள்அதிக அளவில் உள்ளன.                 

சிறுதானியங்கள் உடலில் சக்தியை உருவாக்குவதற்கும், திசுக்களை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமாக உடல்உறுப்புகள் இயங்கவும் வழிவகை செய்கிறது.  சிறுதானியங்கள்  உடல் நலத்திற்கு ஆரோக்கியமானவை என்பது மட்டுமல்லாதுமாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப பயிரிடுதலிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயிர் செய்வதற்கும்,உணவாக பயன்படுத்துவதற்கும் சிறுதானியங்கள் எளிதானவை, சிறந்தவை.  குறைந்த அளவு வேலை, எளிய பராமரிப்பு, குறைந்த அளவுதண்ணீரே போதுமானது.  இதனால் தமிழ்நாட்டில்தற்போது சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது. எனவே சிறுதானியங்களின் சாகுபடியை அதிகப்படுத்தி உற்பத்தியை பெருக்கி அனைவரும் ஆரோக்கியமான உணவு உண்டு,  உடல் நலத்துடன் நிறைவாழ்வு வாழ சிறுதானியம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு சிறுதானிய உற்பத்தியை பெருக்குவோம் என  மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News