சமையில் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பட்டியல்.

Update: 2024-03-04 12:10 GMT
விருதுநகர் சந்தை விலைப் பட்டியல் 

விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை உயர்ந்த அதேநேரம்  வத்தல், பட்டாணி பருப்பு, உளுந்து, துவரை உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளது.


விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1390 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ரூ.1415க்கு விற்கப்படுகிறது.

முண்டு வத்தல் புதுசு வகை குவிண்டால் ஒன்று ரூ.18ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ1000 வரை குறைவு ஏற்பட்டு ரூ.17ஆயிரம் முதல் ரூ.18,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் குண்டூர் வத்தல் கடந்த வாரம் 100 கிலோ ரூ.18ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை விற்பனையானது.

இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.2ஆயிரம் வரை குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் புதுசு வகை கடந்த வாரம் ரூ.13,800க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.200 குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.13600க்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5400க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.200 உயர்ந்துள்ளது. எனவே, ரூ.5600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்டாணி பருப்பு இந்தியா வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.5800க்கு விற்றது. இந்த வாரம் ரூ.300 குறைந்து தற்போதுரூ.5300க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பட்டாணி பருப்பு வெள்ளை இந்தியா வகை கடந்த வாரம் ரூ.6600க்கு விற்பனையானது.இந்த வாரம் ரூ.600 குறைந்துள்ளது. எனவே, ரூ.6ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. உளுந்து லயன் 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,300க்கு விற்கப்பட்ட நிலையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 குறைக்கப்பட்டு தற்போது ரூ.10ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News