காதல் திருமண தம்பதியை கடத்திய பெற்றோர் உட்பட நான்கு பேர் கைது
சேலம் மாவட்டம் அடுத்த இருப்பாளி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் இவரது மாதம்மாள்(43) இவர்களது மகன் ராஜவேல்(22) இவர் லாரி பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜவேலு உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் சோனியா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு எடப்பாடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி, சோனியாவின் பெற்றோரையும்,ராஜவேலுவின் பெற்றோரையும் அழைத்து இருவரும் மேஜர் என்பதால் இருதரப்பு பெற்றோரையும் சமாதானம் பேசி சோனியாவை ராஜவேலுடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜவேலு சோனியா ஆகிய இருவரும் இருப்பாளியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 4மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி தாண்டவன் கொட்டாய் சேர்ந்த சோனியாவின் தந்தை ரவி (50)அவரது தாயார் புவனேஸ்வரி (45) அவரது சித்தப்பா சம்புலிங்கம் (42)அவரது சித்தி மகேஸ்வரி (34)மற்றும் அவரது உறவினர்கள் மணிகண்டன்,வேலு, சுரேஷ் ஆகியோர் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து சோனியா ராஜவேலு இருவரையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனையறிந்த ராஜவேலுவின் தாயார் மாதம்மாள் (42) பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். உடனடியாக எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், அவதானப்பட்டி சோனியாவின் பெற்றோர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சோனியா மற்றும் ராஜவேலுவை பூலாம்பட்டி போலீசார் மீட்டர் மேலும் கடத்திச் சென்ற சோனியாவின் பெற்றோர் உட்பட நால்வரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன் மனைவி கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.