திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 100% எஸ் ஐ ஆர் பணிகள் நிறைவு பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளர் விவரங்கள் அரசியல் கட்சியினரிடம் ஒப்படைப்பு
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட 261 வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 858 வாக்காளர்களுக்கு எஸ் ஐ ஆர் பணிகள் மூலம் படிவங்கள் வழங்கப்பட்டு 100% கணக்கெடுப்பு பணி முடிவடைந்து விவர குறிப்புகள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களிடம் வழங்கப்பட்டது. தி;
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சீர்திருத்த வாக்காளர் பட்டியல் எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெற்று வருகிறது இதன்படி திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 261 வாக்குச்சாவடிகளிலும் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 858 வாக்காளர்களுக்கும்படிவங்கள் வழங்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட படிவங்கள் அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இரட்டை வாக்குகள் இறந்து போனவர்கள் குடும்பத்துடன் இணைக்கப்பட்டவர்கள் நிரந்தர குடிமாற்றம் செய்தவர்கள் படிவம் கொடுக்காதவர்கள் என கண்டறியப்பட்டு 100% பணிகள் முடிவடைந்து யார் யாருக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவர குறிப்புகள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பினை திருச்செங்கோட்டில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் பாக முகவர்கள் அரசியல் கட்சி முகவர்கள்கூட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியகமான லெனின் வழங்கினார் நிகழ்ச்சியின் போது திருச்செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தேர்தல் துணை வட்டாட்சியர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.இதன் படிதிருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 261 வாக்குச்சாவடிகளில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 32,858 எனவும் அவற்றில் படிவம் வழங்கப்பட்டவை 2,32,858 எனவும் பதிவேற்றம் செய்யப்பட்டவை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 645 எனவும் குடும்பத்துடன் இணைக்கப்பட்டவை 2003 எனவும் இறந்தவர்கள் 11,110 எனவும் நிரந்தர குடிமாற்றம் செய்தவர்கள் 16 ஆயிரத்து 271 இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள் 131 படிவம் வழங்காதவர்கள் 4670 என கண்டறியப்பட்டு படிவங்கள் இரண்டு பேருக்கு வழங்கப்படவில்லை என்கிற தகவலோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு நகராட்சியைச் சேர்ந்த எண்பத்தி ஏழு வாக்குச்சாவடிகள் திருச்செங்கோடு ஊடகப் பகுதியைச் சேர்ந்த 157 வாக்குச்சாவடிகள் மல்லசமுத்திரம் பேரூராட்சி சேர்ந்த 17 வாக்குசாவடிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவாக்காளர்கள் குறித்த விவரங்கள் அரசியல் கட்சியினரிடம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வாக்காளர் குறித்த விவரப் பட்டியலை பெற்றுக் கொண்டனர் மேலும் இந்த விபர குறிப்புகளை வைத்து வரும் 16 12 2025 அன்று உத்தேச பட்டியல் வெளியிடப்படும் எனவும் அதில் ஏதாவது திருத்தம் இருந்தாலோ சேர்க்க வேண்டியது இருந்தாலோ புதிய வாக்காளர்கள் சேர்க்க வேண்டி இருந்தாலோ நீக்கம் செய்யப்பட வேண்டியது இருந்தாலோ அது குறித்து 18.1.2026க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் 7 2 2026 வரை விசாரணை செய்யப்பட்டு இறுதி பட்டியல் 16 2 2026 அன்று வெளியிடப்படும் என தேர்தல் பொறுப்பாளரும் வருவாய் கோட்டாட்சியருமான லெனின் தெரிவித்தார்.