அதிமுக நகர 9.வது.வார்டு கழக சார்பில் அம்மாவுக்கு நினைவஞ்சலி...
அதிமுக நகர 9.வது.வார்டு கழக சார்பில் அம்மாவுக்கு நினைவஞ்சலி...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்து வருகின்றனர். அதன்படி ராசிபுரம் வி. நகர் 9.வது வார்டு நகர பொறுப்பாளர் வி.டி. தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் அப்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பத்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆராயி, ஏழாவது வார்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அமுல்ராஜ், வார்டு செயலாளர் பிரபு, ஆறுமுகம், ஒன்பதாவது வார்டு நிர்வாகிகள் ராஜ் உடையார், சௌடேஸ்வரி கோபால், மணிகண்டன், சங்கர், கோபால், சரவணன், மற்றும் 123- 125. பூத் கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.