அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கு 9.ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கு 9.ஆம் ஆண்டு நினைவஞ்சலி..;

Update: 2025-12-05 16:53 GMT
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டி வி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க கழக நிர்வாகிகள் அனைவரும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.பழனிவேல் அவர்களின் ஆலோசனைப் பெயரில் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அவர்கள் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் மற்றும் ராசிபுரம் நகரக் கழகச் செயலாளர்கள் ஆர்.டி. தர்மராஜா, பூபதி, ஆகியோர் முன்னிலையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் நகர கழக அவைத் தலைவர் பாய்க்கார கணேசன், வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழகச் செயலாளர் சி. சுப்புராயன், சதீஷ்குமார், இளைஞர் அணி சிலம்பு அரசன், துணைச்செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர் கருப்பண்ணன் அவர்கள் ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் ராஜா, ராசிபுரம் ஒன்றிய பொருளாளர் சதீஷ், மற்றும் ராசிபுரம் நகரக் கழகத் தினுடைய இணை செயலாளர் வெற்றிச்செல்வன், துணைச் செயலாளர் நகர பொருளாளர் அங்கமுத்து, பழனிசாமி, சதீஷ்குமார், பூபதி, வடிவேலு, சங்கமேஸ்வரன்,மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் என அனைவரும் செல்வி ஜெ. ஜெயலலிதா அம்மாவுடைய ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலியில் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Similar News