புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் – முன்னாள் நகர் மன்ற தலைவர் எம். பாலசுப்பிரமணியம் புகழஞ்சலி..

புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் – முன்னாள் நகர் மன்ற தலைவர் எம். பாலசுப்பிரமணியம் புகழஞ்சலி..;

Update: 2025-12-05 16:09 GMT
மறைந்த முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் புரட்சி தலைவி செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9. ஆம் ஆண்டு நினைவு தினம் ராசிபுரம் முன்னாள் நகர் மன்ற தலைவர் கே. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. அதனையொட்டி, இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வண்ண பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கழக அவைத் தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர் கேபிஎஸ் சுரேஷ்குமார், வெங்கடாசலம், சீனிவாசன், கோபால், ராதா சந்திரசேகர், வக்கீல் பூபதி, வாசுதேவன், ஜெகன், செல்லமுத்து உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News