முன்னாள் முதல்வர் ஜெ.வின் நினைவு நாள் மவுன ஊர்வலம், மலரஞ்சலி

குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.வின் நினைவு நாள் மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-12-05 14:18 GMT
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.வின் நினைவு நாளையொட்டி, பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியிலிருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இதில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன் மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்து, தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலை அருகே, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெ.வின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அனைவரும் ஜெ.வின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Similar News