வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்.;
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளுக்கு முழு சேதத்திற்கான பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த மழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி அறுவடையில் உள்ள நெல் மகசூல் 50 சதவீதம் மட்டுமே பெறும் அளவிற்கு உள்ளது. ஆகையால் தமிழக அரசு அறிவித்த பயிர் காப்பீடு இழப்பு என்று கூறி குறைவான தொகையை மட்டுமே வழங்குகிறது. ஆகையால் பயிர் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் காதில்பூ வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்டதலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் அக்ராபாளையம் செந்தில், வடுகசாத்து தாமோதரன், மலையாம்பட்டு மருதப்பன், முள்ளிப்பட்டு தேசிங்கு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.