கொங்கணாபுரத்தில் உயர்வுக்கு படி வழிகாட்டும் நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சங்ககிரி கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தின் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளர் ஆகும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் ஆகிய நான் முதல்வன் என்கிற புதுமை திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு தாலுகா வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர்கள் அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில் உயர்வுக்குப் படி என்ற நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 2022-2023 மற்றும் 2023-2024 கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ மாணவியர்களுக்கு உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் வழிகாட்டும் நிகழ்ச்சி எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கொங்கணாபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில், சி இ ஓ மற்றும் சேலம் பயிற்சி துணை ஆட்சியர் மாருதிப்பிரியா கலந்துகொண்டு கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். இதில் எடப்பாடி,சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட 25 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து 124 மாணவர்கள், 114 மாணவிகள் என மொத்தம் 235 மாணவ,மாணவியர்கள் பங்கு பெற்று பல்வேறு கல்லூரியில் சேர்க்கை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் அரசு கலைக் கல்லூரி, சேலம் மகளிர் கலைக்கல்லூரி, சேலம் சாரதா மகளிர் கல்லூரி, சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, எடப்பாடி அரசு கலை கல்லூரி, மேட்டூர் அரசு கலைக்கல்லூரி, சேலம் அரசு ஆண்கள்பெண்கள் தொழில் பயிற்சி மையம், மேட்டூர் அரசு தொழில் பயிற்சி மையமாகிய கல்வி நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சேர்வதற்கான சேர்க்கையை வழங்கினார்.