பாச்சல் கிராமத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் விழா

பாச்சல் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-07-01 13:51 GMT

வைட்டமின் ஏ திரவம் வழங்கல்

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில்,

நடைபெற்றது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமினியை சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில்,

ஒன்று முதல் வருகின்ற ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு மாத முதல் ஐந்து வயது வரை உள்ள சுமார் 94868 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ஏ சத்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல்மனவளர்ச்சி மற்றும் புத்தி கூர்மை மிகவும்,

இன்றியமையாத நுண்சத்து ஆகும். வைட்டமின் ஏ சத்து கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமானது ஒன்றாகும். வைட்டம் ஏ திரவம் வழங்குவதால் எந்த ஒரு விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

இந்த நிலையில் இந்த வைட்டமின் ஏ திரவத்தை திருப்பத்தூர் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தை வழங்கினார் இந்த நிகழ்வில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News