ஆலங்குளம் அருகே விபத்தில் காயமுற்ற பெண் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே விபத்தில் காயமுற்ற பெண் உயிரிழப்பு. விபத்துகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.;
ஆண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி பிரேமா (41). இவா், கடந்த மாா்ச் 30 ஆம் தேதி, தனது உறவினா் சண்முகம் மகன் மாரி (24) என்பவருடன், பைக்கில் ஆலங்குளம் வந்து ஜவுளிகள் வாங்கிவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் ராம்நகா் அருகே பைக் நிலைதடுமாறி விழுந்ததில் பிரேமா காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்துகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.