வெடிப்பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!
வேட்டவலம் அருகே வெடிப்பொருட்கள் பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 13:55 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது டிராக்டரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 115 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து, பச்சையப்பன் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.