சிறுமி மர்ம மரணம்- நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு
4 மாதமாக கிடப்பில் கிடக்கும் மயிலாடுதுறையில் இறந்துபோன 9 வயது சிறுமி வழக்கை போக்ஸோ வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணை வேண்டும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை
Update: 2023-11-28 03:19 GMT
மயிலாடுதுறை அருகே மணக்குடியை சேர்ந்த, 4ஆம் வகுப்பு மாணவிக்கு, காய்ச்சல் ஏற்பட்டு 2நாள் கழித்து, மர்மமான முறையில் இறந்தார். தாயாரது புகாரின் பேரில், செம்பனார்கோவில் போலீசார், சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்தனர். சிறுமியின் உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், இச்சிறு மணி தொடர் பாலியல் தொந்தரவுக்கும், ஆளாகியுள்ளது தெரியவந்தது. செம்பனார்கோவிலில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில், அனுமதி வாங்கி மணக்குடியில் உள்ள 5 நபர்களிடம், ஆண்மை டெஸ்ட் செய்து, சென்னைக்கு அனுப்பினர், மேலும் 10 நபர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது, 4மாதமாகியும், பரிசோதனை முடிவு இல்லை, மேல் நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மகாபாரதியை சந்தித்து, மனு ஒன்றை அளித்தார், அதில், சிறுமி பாலியல் தொல்லை என தெரிந்தும், போக்சோ வழக்காக மாற்றவில்லை,4மாதமாக வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மாவட்ட போலீசாரின் மெத்தனம், இந்தவழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.