தமிழ்நாடு தலைகீழாகிவிட்டது: எடப்பாடி பழனிசாமி

கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவால் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.;

Update: 2025-09-26 11:20 GMT

EPS

வேடசந்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மக்கள் மத்தியில் பேசுகையில், “கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவால் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிட்டது. போதைப் பொருளை கட்டுப்படித்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது. திமுக ஆட்சியில் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளதாகவும் கூறி வரும் ஸ்டாலின், இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், தொழில்துறை அமைச்சர் வெற்று காகிதத்தைக் காண்பிக்கிறார். இதன் மூலம் திமுக ஆட்சியின் லட்சணம் இதுதான் என்று அமைச்சர் சொல்லாமல் சொல்கிறார். தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளது போல், ஒரு போலி பிம்பத்தை திமுக உருவாக்கி வருகிறது" என்றார். 

Similar News