வெளியானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதிய டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்'-இன் டீசர்!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதிய டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்'-இன் டீசர் வெளியாகியுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-22 15:56 GMT
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதிய டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்'-இன் டீசர் வெளியாகியுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் தொடரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாட இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, இளம் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுகிறார். இது தமிழ்நாட்டில் முதன்முறையாக நடக்கும் நிகழ்வு. இனி வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் அனுபவங்கள், லட்சியங்கள் மற்றும் உண்மைக் கதைகளை கேட்டறிவார் என கூறப்படுகிறது. அடுத்த தலைமுறையின் கனவுகளைப் பிரதிபலிக்கும் மக்கள் சார்ந்த உரையாடல்களை மையமாகக் கொண்டதாக இந்நிகழ்ச்சிகள் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.