ரெப்கோ வங்கி சேலம் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா!!
ரெப்கோ வங்கி சேலம் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் வரும் 30 ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2025-11-28 11:36 GMT
சேலம் தாதம்பட்டியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் வரும் 30 ஆம் தேதி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 9 30 மணிக்கு சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இயக்குநர் மற்றும் ரெப்கோ வங்கி & ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் தலைவர் சி.தங்கராஜு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், தாயகம் திரும்பிய மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை சி.தங்கராஜு வழங்கி விழாவை சிறப்பிக்க உள்ளார்.