தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டா நியமனம்!!

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-09-26 12:19 GMT

baijayant

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் டெல்லி, அசாம், ஒடிசா தேர்தல்களில் பாஜக வெற்றி பெற வியூகம் வகுத்தவர். அதிமுக-பாஜக இடையே நிலவும் மனஸ்தாபங்களை சரிசெய்யும் திறன் கொண்டவர் என பாஜக மேலிடம் நம்புகிறது.  டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த ஆம் ஆத்மி கட்சி மீதான எதிர்ப்பலைகளை சரியாக அறிந்து அதற்கேற்ப பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து பாஜகவுக்கு வெற்றியை தேடிதந்தார். இதன்மூலம் டெல்லியில் 10 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியதோடு, 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக.வை அரியணை ஏற்றினார். கட்சி தலைவர்களை பொறுமையாக அரவணைத்து செல்லும் பக்குவம் கொண்டவர். தற்போது அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே மனஸ்தாபம் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை சரியாக நிர்வகிக்கும் தலைவராக பாஜக மேலிடம் பைஜெயந்த் பாண்டாவை அடையாளம் கண்டுள்ளது.

Similar News