தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார்: ஈபிஎஸ்
தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
EPS
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “காற்றை எப்படி அணை போட்டு தடுக்க முடியாதோ, அதுபோல எங்களையும் கட்டுப்படுத்த முடியாது. நேற்று கொட்டும் மழையில் கரூர் மக்கள் நிகழ்வில் கலந்துக்கொண்டனர். திமுகவின் முப்பெரும் விழாவில் உங்கள் பேச்சை கேட்க முடியாமல் மக்கள் வெளியேறினார்கள். இன்னும் 6 மாதம் தான் இந்த திமுக ஆட்சி. இந்த திமுக அரசு வெண்டிலேட்டர் உதவியுடன் செயல்படுகிறது. 2026ல் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமையும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிப்பவர் செந்தில் பாலாஜி. தேர்தலில் வெல்ல பொதுமக்களுக்கு பணம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றியவர் தான் செந்தில் பாலாஜி. இன்று இங்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளுகின்றனர். தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார். ஏற்கனவே 5 கட்சிக்கு போய் வந்துவிட்டார். ஆட்சி மாற்றம் வந்த உடன், எந்தக் கட்சிக்கு போவார் என தெரியவில்லை. கரூரில் ஒரு நாளைக்கு, 1 கோடி ரூபாய் அளவுக்கு மணல் திருடுகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மணல் திருடுவோர் தண்டிக்கப்படுவார்கள். அளவுக்கு மீறிய அதிகாரத்தை கொடுத்து, செந்தில் பாலாஜியை வளர்ந்து விடுகிறார் ஸ்டாலின். ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஆட்சி மாற்றம் வரும்போது, தெரியும். செந்தில் பாலாஜியின் அடக்குமுறையை உடைத்தெறிந்து இங்கு மக்கள் கூடியுள்ளனர். அரவக்குறிச்சி மக்கள் இந்தக் கூட்டத்தில் தடுக்கும் வகையில் செயல்படும் அவல ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், அதை மீறி இதை நடத்துவோம் என பேசினார்.