இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன்: விஜய் இரங்கல்!!

இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன் என தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-28 08:54 GMT

கரூரில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்திருந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. விபத்துக்கான சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் காத்திருந்தும் திரும்பி கூட பார்க்காமல் விமான நிலையத்திற்குள் சென்றார் விஜய். இந்நிலையில் சற்றுமுன் வந்த தகவலின் படி தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் விஜய்.. சென்னை விமான நிலையத்தில் போலீஸ் குவிப்பு. இதயம் நொறுங்கி பொய் இருக்கிறேன் - விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். 

Similar News