கரூர் சம்பவத்தை அரசியலாக பார்க்க வேண்டாம்: டிடிவி தினகரன்
கரூர் விபத்தில் யாரையும் குறை சொல்லி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை, இந்த சம்பவத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-09-29 10:18 GMT
டிடிவி தினகரன்
கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கரூர் சம்பவத்தை அரசியல் கட்சியினரும், போலீசாரும் ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். இதுபோன்ர துயர சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் பொறுப்புடன் நடக்க வேண்டும். விஜய் கூட்டத்தில் நடந்தது விபத்து, இதை அரசியலாக்க கூடாது. நான் இதை அரசியலாக பார்க்கவில்லை, யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அரசு சரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கவனமாக இருந்து நிகழ்ச்சி நடத்த வேண்டும்” என்றார்.