ராமதாசை சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.;
By : King 24x7 Desk
Update: 2025-10-07 10:09 GMT
EPS
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை மருத்துவர் ராமதாஸுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மற்றும் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனை சென்று ராமதாஸின் நலம் விசாரித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்து ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.