விஜய் ஏமாந்துவிடக் கூடாது: தமிழிசை

தவெக தலைவர் விஜய்க்கு தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காட்டும் திடீர் ஆதரவு அரசியல் லாபத்திற்காகவே என்றும், இதில் விஜய் ஏமாந்துவிடக் கூடாது என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.;

Update: 2026-01-09 04:14 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக அரசு வழங்கும் 3000 ரூபாய் பொங்கல் ரொக்கம் குறித்து அமைச்சர் துரைமுருகன், இது வாக்குகளுக்காக வழங்கப்படும் பணம் என்று கூறுகிறார். இந்தத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் (DBT) செலுத்தாமல், ரேஷன் கடைகளில் மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கின்றனர், திமுக நிர்வாகிகள் வரும்வரை மக்களைக் காத்திருக்க வைப்பதற்கு எனது கண்டனங்கள். திரைப்படங்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது கருத்துச் சுதந்திரம் எப்படிப் பாதிக்கப்பட்டது? சட்ட விதிகளின்படியே தணிக்கைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காட்டும் திடீர் ஆதரவு அரசியல் லாபத்திற்காகவே இதில் விஜய் ஏமாந்துவிடக் கூடாது. உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை” கூறினார். 

Similar News