சைபர் குற்றங்கள் 283% அதிகரிப்பு... இது தான் ஓரணியில் தமிழ்நாடா?: நயினார் நாகேந்திரன்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
Nainar Nagendran
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு? 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023-இல் 15% அதிகரித்துள்ளது என NCRB அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது - இது தான் ஓரணியில் தமிழ்நாடா? போலி சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் 2021 உடன் ஒப்பிடும்போது 2023ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்துள்ளன - இது தான் ஓரணியில் தமிழ்நாடா? கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன - இது தான் ஓரணியில் தமிழ்நாடா? சகட்டுமேனிக்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் காட்டாட்சியை நடத்தி மக்களின் பாதுகாப்பை நாசமாக்கிவிட்டு நாடு போற்றும் நல்லாட்சி இது என்று நாற்திசையிலும் நாடகமாடுவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.