மத்திய குழு ஆய்வுக்கு பின் நிவாரணம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தபின் அதற்கான நிவாரணம் என்னவென்று அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்
By : King 24x7 Website
Update: 2023-12-23 16:40 GMT
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் மீன் வளர்ப்பு பண்ணையை ஆய்வு செய்த பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , ஊழல் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் திமுக ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது என்றார். மழை குறித்து முன்கூட்டியே அறிவித்தும் அதை கையாளுவதற்க்கு சரியான திட்டம் அவர்களிடையே இல்லை என்றும் , சென்னையில் 4 ஆயிரம் கோடியில் வேலை நடைபெற்றதாக கூறுவதாகவும் , ஆனால் 4 ஆயிரம் கோடி என்ன ஆனது என தெரியவில்லை என்ற எல்.முருகன் , முதல்வர் சென்னையை சீரழிந்த சென்னையாக மாற்றி வைத்துள்ளதாகவும் , இது போலியான திராவிட மாடல் என்றும் முறையாக தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை இது தோல்வியற்ற திராவிட மாடல் என்றார் மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தபின் அதற்கான நிவாரணம் என்னவென்று அறிவிக்கப்படும் என்றும் உதயநிதி அரசியலில் ஒரு குழந்தைதனமாக கத்துக்குட்டியாக உள்ளார் .அரசியலில் அவர் பன்பட்டவராக வளர வேண்டும் அவர் தன்னை முதலில் பக்குவபடுத்தி கொள்ளவேண்டும் என்றார்.