சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்: அன்புமணி

Update: 2024-09-06 08:39 GMT

அன்புமணி ராமதாஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் (City Clean Air Action Plan) அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்; அதன் கீழ் நுண் திட்டங்கள் (Micro Action Plan) உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியும் மனித வளமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குறித்த காலத்திற்குள் தூயக்காற்று திட்டங்கள் செயலாக்கப்படுவதை தமிழக அரசு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News