புதுச்சேரியில் ரூ.750 பொங்கல் பரிசு; முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-12-10 07:45 GMT
பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.