கைதுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தப்பி ஓட்டம்: தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைப்பு!!

Update: 2024-11-11 05:59 GMT

Kasthuri

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி போலீசாரின் கைதுக்கு பயந்து சென்னையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு 18 நிமிடங்கள் பேசினார். அப்போது தெலுங்கு சமுதாய பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News